Corona

முதல் பிரேசில் வகை கொரோனா பாதிப்பை பதிவு செய்த ஸ்பெயின் விமானங்களுக்கு தடை

ஸ்பெயினில் முதல் முறையாக மாட்ரிட் விமான நிலையத்தில் ஒரு பயணி பிரேசிலிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி 29-ஆம் திகதி பிரேசிலிலிருந்து ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட் வந்த 44 வயதான நபருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அவர் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அவருக்கு தொற்றியிருப்பது பிரேசிலில் பரவிவரும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் என்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, இதுவே ஸ்பெயினில் கண்டறியப்பட்ட முதல் பிரேசில் வகை தொற்று என மாட்ரிட்டின் பிராந்திய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.

பரவிவரும் உருமாறிய கொரோனா வைரத்தின் காரணமாக, ஸ்பெயின் இந்த வாரம் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தது. அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் முதலே பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் ஏற்கெனவே தென்னாப்பிரிக்க வகை வைரஸின் 2 பாதிப்புகளும், பிரித்தானியா வகை வைரஸின் 450 பாதிப்புகளும் பதிவாகியுள்ளது.

ஸ்பெயினில் கொரோனாவால் இதுவரை 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 61,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 


இலங்கையின் சுயாதீன தீர்மானங்களில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு அதிகாரம் இல்லை: சுனில்!

கெட்ட வார்த்தை பேசிய வெளிநாட்டு பெண்ணுக்கு துபாயில் கொடுக்கப்பட்ட தண்டனை