Corona

உருமாறிய கொரோனாவை தடுக்கும்! பிரித்தானியா தடுப்பூசி துறை மந்திரி சொன்ன தகவல்

உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை, தற்போதைய தடுப்பூசிகளே தடுக்கும் என்று பிரித்தானியாவின் தடுப்பூசித் துறை மந்திரி நதிம் சகாவி கூறியுள்ளார்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது அது உருமாற்றம் அடைந்த பல்வேறு வடிங்களில், பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

குறிப்பாக, பிரித்தானியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிராக தற்போதுதான் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனால், இந்த தடுப்பூசிகள் மேற்படி உருமாற்றம் பெற்ற வைரஸ்களையும் தடுக்குமா? என்ற கேள்வி மருத்துவ வட்டாரங்களில் எழுந்துள்ளன.

ஆனால் இந்த உருமாறிய கொரோனா தொற்றுக்களை தற்போதைய தடுப்பூசிகளே தடுக்கும் என பிரித்தானியாவின் தடுப்பூசித்துறை மந்திரி நதிம் சகாவி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போதைய தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா வைரஸ்க்கு எதிராக, குறிப்பாக இவை தீவிர நோயாகவோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும்போதோ வீரியமாக இருக்காது என்பது மிகவும் அரிது. எனவே இது ஒரு நல்ல செய்தி என்று தெரிவித்தார்.

உலக அளவில் உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றுகள் தற்போது சுமார் 4 ஆயிரம் இருப்பதாக கூறிய அவர், எனவே அவற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல் திறனை அதிகரிப்பது குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறினார்.

 

 


லண்டனில் குறைந்த வயதில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இந்த சிறுமியும் ஒருவர்!

ஆபாயகரமாக விமான சக்கரத்தில் மறைந்து லண்டலிருந்து நெதர்லாந்து பயணித்த சிறுவன்!