மத்திய பிரதேசத்தில் எமதர்மராஜா வேடமணிந்து போலீஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 70 லட்சத்து 17 ஆயிரத்து 114 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் எமதர்மராஜா வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர வேண்டும் என்ற செய்தியை பரப்பவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.