Corona

பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வழமை போல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப் படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 2ஆம் திகதி தொடக்கம், 6 முதல் 13ஆம் தரங்களிற்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகியது.

ஆரம்ப வகுப்புகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளை பாடசாலைக்கு வருவார்கள் எனவும் கல்வி நடவடிக்கைகள் வழமைப் போல நாளை முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாடசாலை மாணவர்கள் சுகாதார வழிகாட்டுதல் களை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்


அமெரிக்க தலையீட்டில் கைச்சாத்தான ஒப்பந்தம்!

பிரித்தானியாவில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் எத்தனை பேருக்கு பாத...