COVID-19: நோய்த்தொற்று அபாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்ட 3 தங்கும் விடுதிகளில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள்
அது குறித்துச் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
-6 துவாஸ் சவுத் ஸ்ட்ரீட் 15-இல் அமைந்துள்ள CDPL துவாஸ் தங்கும் விடுதி
அண்மையில் அடையாளம் காணப்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் – 7
சென்ற மாதம் 10-ஆம் தேதி தங்கும் விடுதியில் நோய்த்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பட்டியிலிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னால் – 2000க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.
-15 பென்ஜுரு வாக்கில்(Penjuru Walk) அமைந்துள்ள Cassia @ Penjuru தங்கும் விடுதி
அண்மையில் அடையாளம் காணப்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் – 13
கடந்த மாதம் 10-ஆம் தேதி தங்கும் விடுதியில் நோய்த்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பட்டியிலிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னால்- 1,900க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன
-12 கிராஞ்சி ரோட்டில் அமைந்துள்ள கிராஞ்சி லாட்ஜ் 1
அண்மையில் அடையாளம் காணப்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் – 5
கடந்த மாதம் 8-ஆம் தேதி தங்கும் விடுதியில் நோய்த்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பட்டியிலிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னால்- 670-க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.
கிருமித்தொற்று இல்லை என்று முன்னர் உறுதிசெய்யப்பட்ட தங்கும்விடுதிகள் சில, அண்மை வாரங்களில் கிருமிப்பரவல் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன
முந்தைய செய்தி
பிரித்தானியாவில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் எத்தனை பேருக்கு பாத...
அடுத்த செய்தி
“அரசியலில் இருந்து விலகுவேன்”