Watch Video
news
News

துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் நியமனம்

தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்தின் தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது, கழிவுகளை அகற்றுவோரின் குறைகளை தீர்ப்பதற்காக, தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்தை, 1994ல் அமைத்தது. இது, ஒரு தலைவரையும், நான்கு உறுப்பினர்களையும் உள்ளடக்கியது.

இந்த ஆணையத்தின் தலைவராக, சென்னையை சேர்ந்த, தமிழக பா.ஜ., பட்டியல் அணி முன்னாள் மாநில தலைவர் வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக, பீஹாரை சேர்ந்த பாபன் ராவத்; உறுப்பினர்களாக, ஜெய்ப்பூரை சேர்ந்த அஞ்சனா பவார், கேரளாவை சேர்ந்த வாவா ஆகியோர் நியமிக்கப்பட்டுஉள்ளனர். இவர்கள் இப்பதவியில், 2022 மார்ச், 31 வரை இருப்பர்.

 


இரட்டை இலக்க வெற்றி: சுதாகர் ரெட்டி நம்பிக்கை

இந்திய பயணிகளின் வருகையைத் தடுத்தால் பொருளாதாரம் பாதிக்கும்............!!!