Watch Video
news
News

ஐபிஎல் டி20: கர்நாடக வீரர் கௌதம் ரூ.9.25 கோடி, தமிழக வீரர் ஷாருக்கான் ரூ.5.25 கோடிக்கு ஏலம்

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிக்கான 14-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் தொடங்கியது. 14வது ஐபிஎல் டி.20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர்  நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் குறிப்பிட்ட 5 நகரங்களில் மட்டும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சீசனுக்காக 8 அணிகளும் ஏற்கனவே தங்களுக்கு வேண்டிய வீரர்களை தக்கவைத்ததுடன், தேவையில்லாத வீரர்களை விடுவித்துவிட்டன. இந்நிலையில் ஐ.பி.எல். வீரர்கள் மினி ஏலம் சென்னையில் தொடங்கியது. இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,114 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். இதில் இறுதி பட்டியலில் 164  இந்திய வீரர்கள், 128 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 292 பேர் இடம் பெற்றுள்ளனர்.


ஆசிரியருக்கு கொரோனா- காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி மூடப்பட்டது

வண்ணாரப்பேட்டை- விம்கோநகர் மெட்ரோ ரெயிலில் 3 நாளில் 27 ஆயிரம் பேர் பயணம்