News

சென்னை-கேரளா ஆட்டம் டிரா

நேற்று மாலை நடந்த 101-வது லீக் ஆட்டத்தில் கோவா எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தியது. கோவா அணியில் இகோர் அங்குலோ , ரிடீம்  கோல் அடித்தனர். 19-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 7 வெற்றி, 9 டிரா, 3 தோல்வி என்று 30 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருப்பதுடன் அரைஇறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அதே சமயம் 7-வது தோல்வியை சந்தித்த பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

இரவில் நடந்த சென்னையின் எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 
 


11.19 கோடியை தாண்டிய உலக கொரோனா தொற்று

உடல் பருமனைக் குறைக்க சாப்பிடலாம் கத்தரிக்காய்