இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது. ஆனால் மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “இரண்டு மூன்று நபர்கள் இந்திய விவசாயத்தை சொந்தமாக்கவும் கட்டுப்படுத்தவும் வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது. ஆனால் மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பாப் நட்சத்திரங்கள் நம்மிடம் உள்ளனர். ஆனால் இந்திய அரசு அக்கறை காட்டவில்லை என தெரிவித்துள்ளார் .