அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 53 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது. கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.