யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நோயாளி ஒருவருக்கும் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் இருவர் உட்பட சிலரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ள நிலையில், பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று மாலையே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.