News

பெண்களும் இராணுவத்தில் சேர அனுமதி

சவூதி அரேபிய பெண்கள் இப்போது சவூதி அரேபிய இராணுவம், ராயல் சவூதி விமான பாதுகாப்பு, ராயல் சவூதி கடற்படை, ராயல் சவூதி மூலோபாய ஏவுகணை படை மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சவூதி பாதுகாப்பு அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்களும் பெண்களும் இப்போது ஒருங்கிணைந்த சேர்க்கை போர்டல் மூலம் இராணுவத்தில் சம பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெண்கள் இனி படை வீரர்களாக, லான்ஸ் கார்போரல்கள் மற்றும் சார்ஜென்ட்களாக நியமிக்கப்படுவார்கள்.


போயிங் 777 விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்

நியூசிலாந்து அணி அபார வெற்றி