News

நியூசிலாந்து அணி அபார வெற்றி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 4 ஓவர்களில் 19 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மார்ட்டின் கப்தில் ரன் எதுவும் எடுக்காமலும், டிம் செய்பெர்ட் 1 ரன்னிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 12 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

 99 ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி டுனெடினில் நாளை மறுநாள்  நடக்கிறது.


பெண்களும் இராணுவத்தில் சேர அனுமதி

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் திட்டம் முரணமானது.........