இத்தாலியில் கல்லறை இடிந்து விழுந்ததால் நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள் கடலில் மூழ்கியுள்ளன.
இத்தாலியின் Genoa-வுக்கு அருகில் உள்ள Camogli-வில் இருக்கும் குன்றின் மீது கல்லறை இருந்துள்ளது.
திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அந்த கல்லறை இடிந்து விழுந்ததில் சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் விழுந்து மூழ்கியுள்ளன.
சுமார் 50 மீற்றர் கீழே உள்ள பாறைகளில் விழுந்ததால், சவப்பெட்டிகள் சேதமடைந்துள்ளன. இதனால் சவப்பெட்டியில் இருந்த சடலங்கள் திறந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.