News

பொலிஸ் நிலையத்தில் இறுதி ஆண்டு சட்டப் படிப்பு மாணவரை கொடூரமாக தாக்கல் ....

பேலியாகொட பொலிஸ் நிலையத்தில் இறுதி ஆண்டு சட்டப் படிப்பு மாணவரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் குறித்த விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரியும், இலங்கை சட்டத் தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் சாலிய பீரிஸும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

 


முடி அழகா வளரணும்னா நீங்க எதெல்லாம் சாப்பிட கூடாதுன்னும் தெரிஞ்சுக்கணும்!

26.12 .2020 | Today Tamil News | இன்றைய மாலை நேர செய்திகள் | FM Tamil News