Watch Video
news
News

மியன்மாரில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் வொஷிங்டனை திகிலடைய செய்துள்ளது

மியன்மாரில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் வொஷிங்டனை திகிலடைய செய்துள்ளது


மியன்மாரில், பாதுகாப்புப் படையினரால் செய்யப்பட்ட கொலைகள், வொஷிங்டனை திகிலடைய செய்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் அண்டனி ப்ளின்கென் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் நேற்று நடத்தப்பட்ட போராட்டங்களின்போது, இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகங்களில், சிறுவர்கள் உள்ளிட்ட 90க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க வெளிவிவகார செயலாளர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் தைரியமான மக்கள் இராணுவத்தின் பயங்கரவாத ஆட்சியை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


28.03 .2021 | Today Tamil News | இன்றைய இந்திய செய்திகள் |Sri Lanka News| FM Tamil news | Tamil

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த அவல் வெஜிடபிள் கட்லெட்