மனைவி:உங்களை பார்க்காமலே கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
கணவர்: அதுக்கு என்ன இப்போ
மனைவி: நான் தான் தியாகி...!!
கணவர்: உன்னை பார்த்த பின்னாலும், கல்யாணத்துக்கு OK சொன்னேன். நான் தானே பெரிய தியாகி
_____________________________________________________________________________________________
மனைவி : என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு.
கணவன்: சரி அதுக்கு என்ன இப்போ?
மனைவி: நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.
கணவன் : அடப்பாவி...! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?
__________________________________________________________________________________________
நபர் 1 : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?
நபர் 2 : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
நபர் 1 : தெரியுது...
நபர் 2 : அது நேத்து எனக்கு தெரியலை.!!!!!!!!!!!!!