Others

தலைமுடியில் தேய்க்கவே கூடாத எண்ணெய்கள் என்னென்ன? தேய்ச்சா என்ன பிரச்சினை வரும்...

நாம் அனைவருமே நம் தலைமுடி நீண்டு கருகருவென ஆரோக்கியமாக வளர வெவ்வேறு ப்ராடக்ட்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொருவருக்கும் அவர்களின் ஹர் கேர் ரொட்டினில் ஒரு சிறந்த கூந்தல் எண்ணெய் அவசியம், ஆனால் அவற்றை விட தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களும் இருக்கத்தான் செய்கின்றது. நாம் பல எண்ணெய்களை அவற்றின் நன்மைகள் மற்றும் பயன்களுக்காக உபயோகிக்க முனைகிறோம், ஆனால் சில பொருட்களை தவிர்ப்பதே சாலச்சிறந்தது. இந்த கட்டுரையில், புகழ்பெற்ற தோல் மருத்துவரும்(டெர்மடாலஜிஸ்ட்), டாக்டர் நிவேதிதா தாதுவின் தோல் மருத்துவ கிளினிக்கின் நிறுவனருமான டாக்டர் நிவேதிதா தாது சில சூழ்நிலைகளில் அவசியம் தவிர்க்கப்பட வேண்டிய சில எண்ணெய்களை பட்டியலிட்டுள்ளார்.

​ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் முடிக்கு மிக நல்லது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நீளமான, நேரான மற்றும் அடர்த்தி குறைவான கூந்தலை கொண்டவர்கள், அவர்கள் தலைமுடியில் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லதல்ல, ஏனெனில் அது கூந்தலை க்ரீஸியாகவும், வெயிட்டாகவும் காட்டும். முடி வளர்ச்சி சைக்கிளுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் ஒலூரோபின் என்ற கூறு ஆலிவ் எண்ணெயில் இருக்கின்றது.

ஆலிவ் எண்ணெய் இயற்கையிலேயே காமெடோஜெனிக், அதாவது இது துளைகளை அடைத்து முகப்பருவைத் தூண்டும் தன்மை கொண்டது. எனவே யாருக்காவது முகப்பரு ஏற்பட்டால், அவர்கள் தலைமுடியில் ஆலிவ் எண்ணெய் உபயோகப்படுத்துவதை அறவே தவிர்க்கவேண்டும்.

​கேஸ்டர் ஆயில்ஆமணக்கு எண்ணெய்

கூந்தல் வளர்ச்சிப் பெற கேஸ்டர் ஆயிலைப் பயன்படுத்துபவர்களும் உண்டு. பெரும்பாலும் பலருக்கு கேஸ்டர் ஆயிலினால் அலர்ஜி ஏற்படும், அத்துடன் இது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். இது உதவக்கூடிய எண்ணெயாக இருந்தாலும், முடிகளில் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதில் சில தீமைகளும் இருக்கின்றது. கூந்தலில் கேஸ்டர் ஆயிலைப் பயன்படுத்துவது கடுமையான முடி உதிர்வை ஏற்படுத்தும். இது உச்சந்தலையில் படிந்து,கூந்தலை ஃப்ரிசியாகவும் அவற்றில் அதிக சிக்குகளையும் ஏற்படுத்தும் விளைவு இருக்கிறது.

 

 

 


ஓடிடியில் ரிலீஸாகிறதா நரகாசூரன்? ரசிகர்களை உற்சாகமாக்கிய செய்தி!

வலிமை இயக்குனரை சந்தித்த ‘மாஸ்டர்’ இயக்குனர்