Others

பருக்களுக்கு பை சொல்லும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்! சருமத்தையும் பாதுகாக்கும்!

ஆயுர்வேதத்தில் முகப்பருவை குணப்படுத்த இயலும். ஆயுர்வேதம் முகப்பருவுக்கு காரணம் பித்த தோஷத்தின் வெளிப்பாடு என்று சொல்கிறது. முகத்தில் வரக்கூடிய முகப்பருக்கள் மேலோடு இல்லாமல் சருமத்தின் ஆழம் வரை பாதிக்க கூடும்.

ஆயுர்வேதத்தின் படி உடலில் வாதம். பித்தம் மற்றும் கபம் மூன்றும் சமநிலையில் நல்ல ஆரோக்கியம் இருந்தால் இந்த மூன்று தோஷங்களும் தாக்காமல் சருமம் ஆரோக்கியமாக சமநிலையில் இருக்கும். அந்தவகையில் முகப்பரு என்பது பித்த தோஷத்திம் மோசமான காரணம் என்று சொல்லப்படுகிறது. இது தான் சருமத்தை நச்சுள்ளதாக மாற்ற செய்கிறது.

முகப்பரு அதிகமாக இருப்பவர்கள் உணவில் அதிக காரம், புளிப்பு போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிகமாக வறுத்த மற்றும் புளிப்பு உணவுகள் தவிர்க்க வேண்டும். முகப்பருவை போக்க ஆயுர்வேதம் சொல்லும் வழிமுறைகளில் சிலவற்றை இப்போது பார்க்கலாம். இவை நிச்சயம் உங்களுக்கு பலன் கொடுக்கும்.

முகத்துல இருக்கிற கரும்புள்ளி மறையவே மாட்டேங்குதா?... இத மட்டும் ஒருவாரம் பண்ணுங்க... காணாம போயிடும்...

முதலில் முகத்தில் வரும் பருக்கள் பெரிய பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். வீட்டிலேயே ஆயுர்வேத முறையில் இதை சரிசெய்து விட முடியும். பருக்களுக்கு ஆயுர்வேதம் சொல்லும் தீர்வு

வசம்பு பொடி - 10 கிராம்
கொத்துமல்லி விதைகள் - 10 கிராம்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பாச்சோடி - 10 கிராம்

இந்த மூன்றையும் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்றாக பசைபோல் அரைத்து முகம் முழுக்க தடவுங்கள். ஒரு மணி நேரம் வரை முகத்தில் அப்படியே இருக்கட்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் முகப்பருக்கள் இல்லாமல் செய்துவிடும்.
 

இரவில் தூங்கும் போது பன்னீர் எடுத்து முகம் முழுக்க தளர தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவி எடுத்தால் முகத்தில் பருக்கள் ஓடிவிடும். அதோடு சரும பாதிப்பும் இருக்காது.

நெல்லிக்காய்களை நறுக்கி கொட்டைகளை விதைகளை இடித்து மைய அரைக்கவும். மிக்ஸியில் மைய அரைத்து விழுதாக முகத்தில் தடவி விடவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் பருக்கள் குணமாகும்.

ஆயுர்வேத மருந்துகடைகளில் கிடைக்கும் தூய குங்குமாதி தைலம், குங்குமதி லேபம் போன்றவற்றை இரவு நேரங்களில் முகத்தில் தடவி மசாஜ் செய்துவந்தாலும் பருக்கள் குணமடையக்கூடும்.

சருமத்தில் பருக்கள் உடலில் பித்தம் அதிகரிப்பதால் தான் வருகிறது என்னும் போது திரிபலா பயன்படுத்தலம். இது சிறந்த திர்வும் கூட. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் திரிபலா சூரணத்தை எடுத்துகொள்ளலாம். அல்லது தூங்கும் போதும் வெதுவெதுப்பான நீரில் திரிபலாவை கலந்து குடிக்கலாம்.

இது முகப்பருக்களை குணப்படுத்த செய்வதோடு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையையும் கெட்ட பாக்டீரியாக்களையும் வெளியேற்ற செய்கிறது.

புட்டப்பகுதியில் வரக்கூடிய பருக்கள் நீங்க, என்ன செய்யணும் தெரியுமா?

பருக்கள் அதிகமாக இருக்கும் போது அதை அதிகப்படுத்தும் விதமாக உணவுகளை எடுத்துகொள்ள வேண்டாம் இயன்றவரை இயற்கை உணவுகளின் மீது கவனம் செலுத்துங்கள். இது உடலை அமைதியாகவும் உள்ளே சுத்தமாகவும் வைத்திருக்க செய்யும். உங்கள் பருக்களுக்கான பராமரிப்பில் எப்போது வீட்டிலேயே இருக்கட்டும்.

அதே போன்று அதிகம் நீர் குடிப்பதையும் உறுதி செய்யுங்கள். அதோடு மன அழுத்தமும் முகப்பருக்களை ஊக்குவிக்க செய்வதால் அதை தவிர்க்க செய்யுங்கள். ஏனெனில் அழகு என்பது உள்ளிருந்து வருகிறது. அதனால் முகப்பருக்களை அடியோடு விரட்ட முடியும் என்பதை உறுதி செய்யுங்கள். பிறகு உங்கள் முகத்தில் பருக்களை தேட செய்வீர்கள்.

 


பருத்தித்துறை திக்கம் சந்தி உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

உ.பி.: பலத்த பாதுகாப்புக்கிடையே தலித் சிறுமிகள் உடல் அடக்கம்