Watch Video
news
Politics

காங்., ஆட்சிக்கு வந்தால் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து: பிரியங்கா

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் சஹரன்பூரில், காங்., சார்பில் நடந்த விவசாயிகள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், பிரியங்கா பேசியதாவது: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு, பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர்களும் அவமரியாதை செய்துள்ளனர். அவர்கள் போராட்டம் நடத்துவது ஏன் என்பது மத்திய அரசுக்கு புரியவில்லை.


போராட்டம் நடத்தும் விவசாயிகளை தேச விரோதி என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், மத்திய அரசு தான் தேசத்திற்கு எதிராக செயல்படுகிறது. பாக்., சீனா செல்வதற்கு எல்லாம் நேரமிருந்த பிரதமர் மோடிக்கு, போராடி வரும் விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை. காங்., மத்தியில் ஆட்சிக்கு வந்தால், புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


பிப். 18-இல் ரயில் மறியல் - விவசாயிகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்