Watch Video
news
Politics

மஹா.,வில் கட்சியை வலுப்படுத்த பா.ஜ., அதிரடி வியூகம்

மஹாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா கூட்டணியில் பிளவு ஏற்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த, பல்வேறு வழிகளிலும் பா.ஜ., தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

பெருவாரியான ஆதரவு


மஹா., சட்டசபைக்கு, 2019ல் நடந்த தேர்தலுக்குப் பின், பா.ஜ., கூட்டணியில் இருந்து சிவசேனா விலகி, மஹா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி, ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் கட்சியை வலுப்படுத்தும் பணியில், பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, சமீபத்தில் மஹாராஷ்டிரா சென்றார்.

கொங்கன் பகுதியான சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த, சிந்துதுர்க் ஷிக் ஷான் பிரசாரக் மண்டல் என்ற அமைப்புக்கு சொந்தமான, மருத்துவக் கல்லுாரியை, அவர் திறந்து வைத்தார். சிந்துதுர்க் ஷிக் ஷான் பிரசாரக் மண்டல் என்ற அமைப்பு, பா.ஜ.,வைச் சேர்ந்த, நாராயண் ரானேவால் துவக்கப்பட்டது. இவர், 2005 வரை, சிவசேனாவில் மூத்த தலைவராக இருந்தார். அதன் பின், காங்கிரசில் இணைந்தவர், 2019ல் பா.ஜ.,வில் சேர்ந்தார். இவருக்கு, கொங்கன் பகுதியான சிந்துதுர்க் மாவட்டத்தில், பெருவாரியான ஆதரவு உள்ளது.

 சிதைத்து விட்டார்


இதை பயன்படுத்தி, கொங்கன் பகுதியில் கட்சியை பலப்படுத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. ரத்னகிரி, சிந்துதுர்க், ராய்காட், தானே, பால்கார், மும்பை நகர் மற்றும் மும்பை புறநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது கொங்கன். மஹாராஷ்டிராவின், 288 சட்டசபை தொகுதிகளில், கொங்கன் பகுதியில் மட்டும், 75 தொகுதிகள் உள்ளன. எனவே, அங்கு பா.ஜ.,வை பலப்படுத்தும் நோக்கத்தில், அமித் ஷாவின் சமீபத்திய பயணம் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

சிந்துதுர்க் மாவட்டத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்லுாரி திறப்பு விழாவில், அமித் ஷா பேசியதாவது:காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததன் வாயிலாக, பால் தாக்கரேவின் அடிப்படை கொள்கையையே உத்தவ் தாக்கரே சிதைத்துவிட்டார். கடந்த, 2020 ஜூனில், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்கள், 'நிசர்கா' புயலால் பாதிக்கப்பட்ட போது, முதல்வர் உத்தவ் தாக்கரே ஒருமுறை கூட நேரில் வந்து மக்களை சந்திக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

ஆனால், அமித் ஷா வந்து சென்ற சில தினங்களிலேயே, சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த, ஏழு பா.ஜ., கவுன்சிலர்கள், சிவசேனாவில் இணைந்துள்ளனர்.


10.02.2021 - இன்றைய உலக செய்திகள் | Fm Tamil News | FM Tamil News

டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்