Tamil elixir

மரியாதை தெரியாத பொண்ணு

ஏன்டா மகனே நீ மட்டும் திடுதிப்புனு வந்து நிக்கிற? உன் மனைவி மருதாணி புதுப்பொண்ணு. மறு அழைப்புக்கு சம்மந்தி வீட்டுக்குப் போனவன் சொல்லாம கொள்ளாம இப்படி வந்திருக்கிறயே இது சரியா?

நீங்க என்னை ஒரு கிராமத்துப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்ததே பெரிய தப்பு. அவுங்க தாலி கட்டின அடுத்த நிமிசத்திலிருந்து வாங்க போங்கனு கூப்பிட்டு அசிங்கப்படுத்தறா. நானும் அவ அம்மா அப்பாகிட்டச் சொல்லி அவுங்களத் திருத்தச் சொன்னேன். அவுங்க (இ)ண்டு பேரும், "தம்பி நீங்க ஒருவேளை எங்க பொண்ணு வயசைவிட வயசு குறைவா இருந்தாக்கூட "புருசன வாங்க போங்க, என்னங்க"னு மரியாதையா கூப்படறதுதான் எங்க வழக்கம். பட்டணத்துப் பொண்ணுங்கதான் மரியாதை கெட்டதனாமா "புருசனை "வாடா, போடா, ,என்னடா"ன்னும் பேரைச் சொல்லியும் கூப்புடுவாங்க"னு சொல்லறாங்க..

அவுங்க சொல்லறது சரிதானே.

இல்லம்மா. என்னோட நண்பர்களோட மனைவிகள் எல்லாம் அவுங்கள "வாடா, போடா, என்னடா"னு கூப்படறதோட அவங்க பேருங்களச் சொல்லியும் கூப்படறாங்க. என் நண்பர்களை
அவுங்க மனைவிகளை வாங்க போங்க, என்னம்மா, சொல்லுமா"னு மரியாதையாக் கூப்படறாங்க. அவங்கெல்லாம் சந்தோசமா குடும்பம் நடத்தறாங்க. எனக்கு மரியாதை தெரியாத அந்தப் பொண்ணு வேண்டாம்மா.


ஏஞ்சல் நீ நெஞ்சில் ஆடும் ஊஞ்சல் நீ

மாங்காய் மாங்காய்