Tamil elixir

The Crime- ??

அந்த கடற்கரையோர ரெஸ்ட்டான்டில் சர்வர் கொண்டு வந்திருந்த டீக் கோப்பை சற்றே ஆறிபோய் இருக்க எடுத்து உதட்டுக்கு பொருத்தி ஒரு சீப்பு சீப்பி வைத்தான் ஜெ. வைத்து விட்டு எதிரே இருந்தவனைப் பார்த்தான்.

“பாஸ் ஏதோ முக்கியமான விசயம்ன்னு சொன்னீங்க.? சொல்லுங்க ரொம்ப நேரமா இப்டியே உக்காந்திருக்க போர் அடிக்கி.”

“இந்த போட்டோ பாரு” என்றபடியே தன் கோட்டுக்கு உள்ளிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினான்.”

“வாவ்.. பாஸ் யார் இது செம்ம அழகா இருக்கா. எனக்கே சொல்லாம என் கஷ்டத்த புரிஞ்சி எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுடீங்களா.?”

“லுக் கிருஷ், இவ நான் நான் உனக்கு பார்த்த பொண்ணு கிடையாது. இவ பேரு நிரஞ்சனா. நம்மளோட அடுத்த கேஸ் இவ கிட்ட இருந்து தான் தொடங்குது.” என்றபடியே இன்னொரு கவரை எடுத்து கிருஷிடம் நீட்டினான்.

“இது யார் பாஸ் பொன்னம்பலத்துக்கு அண்ணன் மாதிரி இருக்கான்.?”

“இவன் பேருதான் உபேந்திரா. ரகசிய நிழல் உலக தாதா. சட்ட விரோதமா போதை பொருள் கடத்துறதுல கில்லாடி. ரொம்பநாளா இவனை தேடிட்டு இருக்காங்க ஆனா இவன் எப்படியோ தப்பிச்சிடுறான். இப்ப எதோ முக்கியமான விஷயத்துல இவன் ஈடுபட்டிருக்குறதா ரகசிய தகவல். அது நிச்சயம் ஏதோ பயங்கரமான விஷயமா தான் இருக்கணும். அது என்னன்னு தான் நாம கண்டுபிடிக்கப் போறோம்.”

“எப்படி பாஸ்.?”

“என்னதான் அவன் பெரிய தாதாவா இருந்தாலும் அவன் பொண்ணுங்க விசயத்துல பெரிய வீக்னெஸ். அந்த உபேந்திராவோட காதலி தான் இந்த நிரஞ்சனா.”

“நினைச்சேன் இவனை மாதிரி மொள்ளமாரி முடிச்சவிக்கி பசங்களுக்குத்தான் லட்டு மாதிரியான பொண்ணுக கிடைக்கிது.” என கிருஷ் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள,

“போதும்டா.. ரொம்ப அலையாத, இன்னைக்கு நைட் ரெடியா இரு..”

_______ ____ ______ ______________ ________ _______


இரவு.....


அந்த ஆடம்பர பங்களா விளக்கு வெளிச்சத்தில் தங்க நிறத்தில் மின்ன, அந்த பங்களாவின் மதில் உயரமாய் இருந்தது. பெரிய அளவில் கேட் பூட்டப்பட்டு காவலுக்கு முரட்டு தடியன் ஒருவன் நின்றிருந்தான். அந்த பால்கனியில் ஒரு பெண் வந்து நிற்க, அவளில் ரோஜா இதழ்கள் அந்த இருட்டில் கூட மின்னின. அவள் அணிந்திருந்த சில்க் சாரி காற்றில் பறந்து கொண்டிருக்க,

அதேநேரம் பங்களாவிற்கு எதிரே புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடம் ஒன்றின் மறைவான இருட்டில்...

ரப்பென தன் கழுத்தில் அறைந்தான் கிருஷ்.

“ஸ்ஸ்ஸ்ஸ்.. என்னடா.?”

“கொசு பாஸ்.”

“சரி சொல்றத கவனமா கேளு. அதோ அந்த பங்களா பால்கனில நிக்கிறவ பேர்தான் நிரஞ்சனா. இன்னும் கொஞ்ச நேரத்துல உபேந்திரா அங்க வரப்போறான். நான் அதுக்குள்ளே அங்க போய் நிரஞ்சனாவ பால்கனிக்கு கூட்டி வருவேன். அப்போ நீ உன்கிட்ட இருக்குற இந்த நைட்மோட் காமிரால போட்டோ எடு ஒகே.?”

“ஓகே பாஸ் ஆனா எப்படி போவீங்க.? கேட்டுல ஒரு தடியன் வேற நிக்கிறான்.”

“கேட் பக்கமா யார் போக போறா.”

“பின்ன.?”

ஜெ அருகில் நீண்டதாக இருந்த சாரம் கட்டும் கம்பை தூக்கிக் கொண்டான்.

“என்ன பாஸ் ஜம்பிங்கா.?

“எஸ்..”

“பார்த்து பாஸ் பழைய வடிவேல் படத்துல வர்ற மாதிரி கம்ப வச்சி ஜம்பிங் பண்ண போய் “பால்ஸ்ல” அடி வாங்கிக்க போறீங்க.” என்றான் கிருஷ் சிரிப்பை அடக்கியபடி. ஜெ திரும்பி பார்த்து முறைத்தான்.

“யூ இடியட்.. நான் ஸ்டேட் லெவல் சாம்பியன்டா” என்றபடியே கம்பை தூக்கிக் கொண்டு நடந்தான்.

“பாஸ்..”

“என்னடா.?”

“அவ உள்ள போய்ட்டா.”

“ஓகே..”

“பார்த்து பாஸ் சுவர்ல கண்ணாடி துண்டும் கரண்ட் கம்பியும் இருக்கு.”

“நான் பார்த்துகிறேன்டா..” என்றபடியே ஜெ நடந்தான்.

ஜெ கம்பை தூக்கிக் கொண்டு சத்தமிடாமல் நடந்து காம்பௌன்ட் சுவரை அடைந்தான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து பின்னே சென்று கம்பை வாகாக பிடித்துக் கொண்டு சரேலென்று ஒடி கம்பை சாய்வான கோணத்தில் செங்குத்தாக ஊண்ட, கம்பு விஷக்கென்று சத்தமிட்டபடி அவனை மறுபுறம் சென்று சேர்த்தது. உள்ளே வந்த ஜெ மறுடியும் கம்பை ஊண்டி பால்கனிக்கு ஜம்ப் செய்ய, சிலநொடிகளில் ஜெ பால்கனியில் இருந்தான்.

மேலே வந்ததும் கம்பை ஒரு ஓரத்தில் வைத்து விட்டு மெல்ல பால்கனியில் ஒன்டினான். மெல்ல எட்டிப்பார்க்க உள்ளே யாரும் இல்லை. பாத்ரூமில் நிரஞ்சனா குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. பாத்ரூம் வாசலருகே பதுங்கினான் ஜெ. நிரஞ்சனா குளித்து முடித்து விட்டு டவலைக் கட்டிக் கொண்டு வெளியே வர ஜெ விரைந்து செயல்பட்டு நிரஞ்சனாவை நெருங்கி வாயைப் பொத்தி துப்பாக்கியை எடுத்து முதுகில் வைத்தான்.

“ஹலோ மிஸ் நிரஞ்சனா. சத்தம் போடக் கூடாது. என் துப்பாக்கி பேசுறத நான் விரும்பல.”

“யா..யார் நீ.?

“உன்னோட நலம் விரும்பி.”

“எ.. என்ன என்ன செய்யப் போற.? என்ன விட்டுடு.”

“மிஸ் நிரஞ்சனா நான் உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் நான் சொல்றத மட்டும் கேளு”

“சொ.. சொல்லு..”

“பால்கனிக்கு நட.” அவளை மெதுவாக பால்கனிக்கு நடத்தி சென்றான் ஜெ.

“நிரஞ்சனா என்ன பார்.” என்றபடியே கட்டிடத்தை நோக்கிக் கைக் காட்ட, கிருஷ் போட்டோ எடுக்கத் தயாரானான். திரும்பிய நிரஞ்சனாவைப் கட்டிப் பிடித்து ஜெ அவள் உதட்டில் முத்தமிட்டான்.

“பாஸ்” என்றபடியே போட்டோவை கிளிக் செய்த கிருஷின் காதில் பொறாமையால் புகை வந்தது.

அதே நேரம் பங்களா வாசலில் ஒரு கார் வந்து நிற்க காரில் இருந்து இறங்கினான் உபேந்திரா. கூடவே இன்னொரு தடியனும் இறங்கினான். அவன் விநாயக் உபேந்திராவின் வலது கை.
பங்களா கதவு திறந்து உள்ளே செல்ல சென்றதும் எதிர்பட்டான் இன்னொருவன் அவனின் முரட்டுத்தனமான உருவம் எந்த கொலைக்குற்றங்களையும் அஞ்சாமல் செய்வான் என்பதை சொல்லியது.

“நிரஞ்சனா எங்க.?”

“மேலே இருக்காங்க அய்யா.?”

“போ..போய் நான் கூப்பிட்டேன் என்று வரச் சொல்..”

“சரிங்க அய்யா.” என்றபடியே மாடிக்கு நடந்து போய் கூப்பிட்டான்.

“அம்மா.. அம்மா.. அய்யா வந்திருக்காரு. உங்களை கீழே வரச்சொல்றாரு.” என்ன செய்வது என்று தெரியாத நிரஞ்சனா துப்பாகியுடன் நிற்று கொண்டிருந்தா மிஸ்டர் ஜெவைப் பார்க்க. அவன் உபேந்திராவை மேலே வரச்சொல் என சைகை காட்டினான்.

“நான் இன்னும் ரெடி ஆகல அவரை மேல வரச்சொல்லு.” அவன் கீழே சென்று விஷயத்தை சொல்ல

“அவ அழகுக்கு மேக்அப்ன்னு ஒன்னும் தேவையே இல்ல.” நிரந்ஜனாவின் அழகாய் சிலாகித்தப்படி உபேந்திரா மேலே சென்றான்.

“நிரஞ்சனா மைடியர் நிரஞ்சனா.”

“உள்ள வாங்க.” என்றபடியே கதவை திறந்த நிரஞ்சனாவைக் கண்டு,

“நிரஞ்சனா என்னோட அழகியே, இப்பதான் குளிச்சிட்டு வந்தியா.? உன்ன இன்னொரு முறை குளிக்க வைக்கத்தான் நான் வந்திருக்கேன்.” என்று இளித்துக் கொண்டு உள்ளே வர..

“ஹலோ உபேந்திரா சிவ பூஜைல கரடி மாதிரி நான் இருக்கேன் போல. கதவை சாத்திட்டு சத்தம் காட்டாம இந்தபக்கமா வரமுடியுமா.”

“டேய் யார்ரா நீ.? எப்படி இங்க வந்த.?

“சத்தம் போடாத உபேந்திரா முதல்ல கதவை சாத்து இல்ல என்கைல இருக்குற துப்பாக்கிப் பேசும்.” ஜெவின் கையில் துப்பாக்கியைக் கண்ட உபேந்திரா அமைதியாகி கதவை சாத்திவிட்டு திரும்ப. ஜெ சரேலென தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய துப்பாக்கியை எடுத்து உபேந்திராவை நோக்கிச் சுட. “பிஷக்” என சிறிய அளவில் சத்தமிட்டபடி உபேந்திராவின் கழுத்தில் பாய்ந்தது. கழுத்தில் எதோ குத்திய உணர்வைப் பெறுமுன் உபேந்திரா கீழே சரிந்தான்.

“ஏய்.. அவர ஏன் சுட்ட.?”

“நான் அவன சுடல அது ஆள மயக்கமடைச் செய்யுற ஒரு சின்ன ஊசி. அடுத்து நீதான்.”

“என்ன கொல்லப் போறியா.?”

“அது நீ எப்படி நடந்துக்குற அப்படிங்குறத பொறுத்து. வா பெட்ல படு.” என்றபடி அவளை இழுத்து படுக்கையில் கட்டிபோட்டு விட்டு நிமிர்ந்தான்.

உபேந்திரா தரையில் வித்தியாசக் கோணத்தில் விழுந்து கிடந்தான். அவனை நெருங்கியவன் அவன் உடைகளை சோதிக்கத் தொடங்கினான். உபேந்திராவின் கோட்டுப் பையில் ஒரு மிகச்சிறிய டைரி கிடக்க திறந்து பார்த்தான். வார்த்தைகள் ஒழுங்கற்று எழுதப்பட்டிருக்க கீழே போட்டவன் மறுபடி அதை எடுத்துப் பார்த்தான்.

“இது சங்கேத மொழியா இருக்க வாய்பிருக்கு. எல்லாத்தையும் படம் எடுத்துக்குவோம் பின்னாடி உதவலாம்.” என நினைத்தப்படி தனது செல்போன் காமிராவில் எல்லா பக்கங்களையும் போட்டோ எடுத்துக் கொண்டான். எடுத்து முடித்ததும் திரும்பவும் உபேந்திராவின் கோட்டுப் பையில் வைத்தவன். உபேந்திராவின் கைகளில் இருந்த மோதிரங்களையும் கழுத்தில் இருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டான். நிரஞ்சனாவிடம் திரும்பியவன்,

“நிரஞ்சனா உபேந்திரா கூடவே ஒரு தடியன் இருப்பான் அவனை எப்படியாவது வெளியே அனுப்பு.” என்றபடியே அருகில் இருந்த தொலைபேசியை எடுத்து அவள் அருகில் வைத்தான். இன்டர்காமில் எண்ணைச் சுழற்றியவள் கீழே இருந்த இன்னொரு தொலைப் பேசியை தொடர்பு கொண்டாள். வேலைக்கார தடியன் அதை எடுத்தான்.

“கந்தசாமி விநாயக் கிட்ட போனக் கொடு.”

“விநாயக் அம்மா உன்கிட்ட பேசணுமாம் என்றபடியே தொலைபேசியை விநாயக்கிடம் கொடுத்தான்.

“சொல்லுங்க.”

“விநாயக் அய்யாவுக்கு வயறு சரி இல்ல போய் மாத்திரை வாங்கிட்டு வாயேன்.”

“ஓகே.” போனை வைத்தவன், “நான் மெடிக்கல்ஷாப் வரை போயிட்டு வர்றேன். பாத்துக்கோ” என்றபடி கார் சாவியை கையில் சுழற்றியபடியே போய் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். ஜெ பால்கனியின் மறைவில் இருந்து கார் கிளம்புவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். கார் சென்று கேட் மூடியது.

“ஓகே நிரஞ்சனா உன்னோட வேலைக்காரனைக் கூப்பிடு.”

“கந்தசாமி கொஞ்சமா மேல வா.” என தொலைப்பேசியில் கூப்பிட, கந்தசாமி மேலே வந்தான்.

“அம்மா அம்மா.”

“உள்ளே வா.” கந்தசாமி நிரஞ்சனாவைப் பார்த்துக் கொண்டே உள்ள நுழைந்தவன் விழுந்து கிடந்த உபேந்திராவைப் பார்த்து விட்டான்.

“அம்மா, அய்யாவுக்கு என்னாச்சு என்றபடியே உபேந்திராவை நோக்கிக் குனிய, ஜெ தன்னுடைய கையில் இருந்த மயங்கச்செய்யும் துப்பாக்கியைக் கொண்டு கந்தசாமியை நோக்கிச் சுட, ஆனால் அது சுடவில்லை. ஜெவைக் கண்டு கொண்ட கந்தசாமி “டேய்” என்றபடி அருகில் இருந்த நாற்காலியை தூக்கி ஜெவை நோக்கி வீசினான். நாற்காலி சரியாய் ஜெவின் தலையை தாக்க ஜெ தடுமாறினான்.

“வாடா எம் மவனே இந்தா வாங்கிக்க.” என்றபடியே முஷ்டியை முறுக்கி ஜெவின் வயற்றில் குத்த ஜெ பின்னடைந்தான். துப்பாக்கியால் சுட விரும்பாத ஜெ பின்னால் சற்றே விலகினான். அதை பயன்படுத்திக் கொண்ட கந்தசாமி ஜெவை எத்த ஜெ கீழே விழுந்தான். துப்பாக்கியும் கீழே விழுந்தது. அருகில் இருந்த இன்னொரு நாற்காலியை தூக்கிக் கொண்டு ஜெவை நோக்கி ஓங்கினான். உருண்டு தப்பித்தான் ஜெ. நாற்காலி தரையில் மோதி உடைந்தது. உருண்ட வேகத்தில் நிமிர்ந்த ஜெ கந்தசாமியின் காலை வாரி விட கந்தசாமி பொத்தென்று தரையில் விழுந்தான். விழுந்த கந்தசாமி உடைந்த நாற்காலியை எடுத்து கந்தசாமி ஜெவை நோக்கி வீசினான். ஜெ விலகிக் கொண்டான். கந்தசாமி கீழே விழுந்து கிடந்த ஜெவின் துப்பாக்கியை நோக்கி நகர்ந்தான். ஜெ அவனை மிதித்தான். வேகமாய் எழுந்த ஜெ கந்தசாமியை கழுத்தையும் பேன்டையும் ஒரு சேர அழுத்தி சுவற்றில் மோதினான். கந்தசாமியின் நடுமண்டை சுவற்றில் மோதியது. பொறி கலங்கி தள்ளாடிய கந்தசாமியை தூக்கி ஒரு “German suplex” போட, விழுந்தவன் மயங்கினான்.

“நிரஞ்சனா வா.” என்றபடியே இழுத்துக் கொண்டு ஓடினான் ஜெ.

“எங்க.?”

“கார் செட்டுக்குக்கு. கார் சாவிய எடுத்துக்கோ வேகமா.” கார் சாவியை எடுத்துக் கொண்ட நிரஞ்சனாவை தள்ளிக் கொண்டு ஓடினான் ஜெ.

“நிரஞ்சனா நீ காரை ஓட்டு. எதுவும் தப்பா பண்ண நினைக்காதே என்னோட துப்பாக்கி உன்ன குறி பாத்துட்டே இருக்கும். என்றபடியே நிரஞ்சனாவை காரில் ஏற்றி தானும் ஏறினான். நிரஞ்சனா காரைக் கிளப்பினாள்.

அப்போது, மாடி அறையில் மயக்கம் தெளிந்து எழுந்த கந்தசாமி கார் கிளம்பும் சத்தத்தைக் கேட்டான். விரைந்து எழுந்தவன். கேட் காவலாளிக்கு போனில் பேசினான்.

“இப்போ ஒரு கார் கிளம்பி வருது அந்த காரை வெளிய விடாத. நம்ம அய்யாவ அடிச்சி போட்டு தப்பிச்சு ஓடுறாங்க.”

“நான் பாத்துக்குறேன்.” என்றபடியே தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு திரும்பினான் எதிரில் கார் வந்தது.

“ஏய் நிப்பாட்டு இல்ல சுடுவேன்.” என்றபடியே சுட குண்டு காரின் முகப்புக் கண்ணாடியை கிழித்துக் கொண்டு சென்றது. சற்றும் தாமதிக்காத ஜெ காவலாளியை சுட்டான். குண்டு குறி தவறாமல் காவலாளியின் கையை துளைத்தது.

“மரியாதையா கதவை திற இல்ல நீ சாவ.” என்று ஜெ கத்த, குண்டு துளைத்ததால் வலியில் துடித்துக் கொண்டிருந்த காவலாளி உயிர் பயத்தல் கதவைத் திறந்தான்

“நிரஞ்சனா காரைக் கிளப்பு.” கார் வேகமாக வெளியே சென்றது.

“நிறுத்து” துப்பாக்கி சத்தம் கேட்டதால் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்திருந்த கிருஷ்,

“பாஸ்..” என கூவ

“வேகமா ஏறு கிருஷ்..” நிலைமை புரிந்த கிருஷ் வண்டியின் விண்டோவில் தொற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

“நிரஞ்சனா காரைக் கிளப்பு.” கார் புகையை உமிழ்து விட்டு பறந்தது..


மனதில் ஒரு மெல்லிய சலனம்

1.5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது